திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரரை தேவார முதலிகள் எனக் குறிப்பிடுவர். இவர்கள் பாடிய தேவாரத்தில் 8,262 பாடல்கள் உள்ளன. இதை தினமும் பாட முடியவில்லையே என சிவாலய முனிவர் என்பவர் வருந்தி சிதம்பரம் நடராஜரிடம் முறையிட்டார். பொதிகை மலைக்குச் சென்று அகத்தியரைக் காணும்படி நடராஜர் ஆணையிட்டார். சிவாலய முனிவர் பொதிகை மலையில் தவத்தில் ஈடுபட்டார். அதன் பயனாக அகத்தியரை தரிசித்த போது, தினமும் பாடும் விதமாக 25 தேவார பதிகங்களை தேர்வு செய்து கொடுத்தார். இதுவே ‘அகத்திய தேவாரத்திரட்டு’ எனப் பெயர் பெற்றது. இதில் திருஞானசம்பந்தரின் 10 பதிகம், திருநாவுக்கரசரின் 8 பதிகம், சுந்தரரின் 7 பதிகங்கள் உள்ளன.