ஆலயச் சீர்திருத்தம் பற்றி அரசியல்வாதிகள் பலர் இன்று பேசுகின்றனர். ஆயிரம் ஆண்டுக்கு முன்பே இதை செயல்படுத்தியவர் புரட்சித்துறவி ராமானுஜர். ஆதிதிராவிடர்களுக்கு ‘திருக்குலத்தார்’ என பெயரிட்டு கோயில் வழிபாட்டுக்கு வழிவகுத்தார். கர்நாடகாவிலுள்ள திருநாராயணபுரம் கோயிலில் ஆண்டில் மூன்று நாட்கள் ஆதிதிராவிடர்கள் கருவறையில் பெருமாளை கட்டித் தழுவி வழிபடும் நடைமுறையை ஏற்படுத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஏழாம்நாள் திருவிழாவில் ஆதிதிராவிடர்கள் தேரை தொட்டு இழுக்கச் செய்தார். இதன் பின்பே மற்ற சமுதாயத்தினர் வழிபட அனுமதிக்கப்படுவர்.