108 திவ்ய தேசங்களில் முதல் இரண்டு தலங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருச்சி உறையூர் கமலவல்லித்தாயார் கோயில். இந்த இரு கோயில்களுக்கும் உற்ஸவராக இருப்பவர் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்தான். கமலவல்லித்தாயாரின் அவதார தினமான பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தன்று உறையூருக்கு எழுந்தருளும் இவர் தாயாருடன் மணக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ரங்கநாதரின் பக்தராக இருந்தவர் மன்னர் நந்தசோழன். திருச்சி பகுதியை ஆட்சி செய்த இவர், குழந்தைப்பேறு இல்லாததால் ரங்கநாதரைச் சரணடைந்தார். மன்னருக்கு மகளாக மகாலட்சுமியே அவதரிக்கும்படி பூமிக்கு அனுப்பினார் ரங்கநாதர். ஒருநாள் நந்தசோழன் வேட்டைக்குச் சென்ற போது குளத்தில் பூத்த தாமரை மீது பெண் குழந்தை ஒன்று படுத்திருப்பதைக் கண்டார். மகிழ்ச்சியுடன் குழந்தையை எடுத்து, ‘கமலவல்லி’ என பெயரிட்டு வளர்த்தார். கமலம் என்பதற்கு தாமரை என்பது பொருள். அக்குழந்தை பருவ வயதை அடைந்த போது ஒருநாள் தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது குதிரையின் மீது சென்ற ரங்கநாதரைக் கண்டதும் காதல் கொண்டாள். அவரையே கணவராக அடைய வேண்டும் என விரும்பினாள். நந்தசோழனின் கனவில் தோன்றிய ரங்கநாதர், இளவரசியான கமலவல்லியைத் தான் மணக்க விரும்புவதாக தெரிவித்தார். இதன்பின் கமலவல்லியை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மன்னர் அழைத்துச் செல்ல ரங்கநாதருடன் அவள் ஐக்கியமானாள். இதன் பின்னர் உறையூரில் கமலவல்லித்தாயாருக்கு கோயில் கட்டப்பட்டது. பெருமாளின் திருநாமம் அழகிய மணவாளன். பக்தர்களுக்கு மஞ்சள்காப்பு பிரசாதமாக தரப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பத்தினியாக கமலவல்லித்தாயார் கருதப்படுவதால் ஸ்ரீரங்கத்தை போலவே இங்கும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. கமலவல்லித்தாயாரை வெள்ளிக்கிழமையில் தரிசிப்போருக்கு தடைகள் விலகி விருப்பங்கள் நிறைவேறும். எப்படி செல்வது: திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 5 கி.மீ.,