கம்பம்: ஒடைப்பட்டி காமாட்சியம்மன் கோயில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி மற்றும் அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
ஒடைப்பட்டி காமுகுல ஒக்கலிக (காப்பு) கவுடர் நலச்சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காமாட்சியம்மன் கோயில் பங்குனி உற்சவ திருவிழா வரும் ஏப்ரல் 2, 3, 4 தேதிகளில் நடைபெற உள்ளது. திருவிழாவிற்காக கோயிலில் முகூர்த்ததால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர், தொடந்து கோயில் வளாகத்தில் முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. திருவிழா துவங்கியதை தொடர்ந்து நேற்று மதியம் இங்குள்ள நந்தகோபாலன் அரங்கத்தில் அன்னதானம் நடைபெற்றது. ஒடைப்பட்டி, தென்பழநி, சுக்காங்கல்பட்டி, வெள்ளையம்மாள்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் அன்னதானத்தில் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை ஒடைப்பட்டி காமுகுல ஒக்கலிக (காப்பு) கவுடர் நலச்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.