செஞ்சி ஐயப்பன் கோவில் பஜனை மண்டபம் புதுப்பித்து சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2022 01:03
செஞ்சி: செஞ்சி சந்தைமேடு ஐயப்பன் கோவில் பஜனை மண்டபம் புதுப்பித்து சிறப்பு வழிபாடு நடந்தது. செஞ்சி சந்தைமேடு குளக்கரை அருகே உள்ள ஐயப்பன் கோவில் பஜனை மண்டபம் மேற்கூரை இடிந்து சேதமானது. இதை ஐயப்ப பக்தர்கள் திருப்பணிகள் செய்து நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 4 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து மகா கணபதி ஹோமம் நடந்து . 6 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கலச நீர் கொண்டு ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது. திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானம் வழங்கினர்.