வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ ரமணாலயம் ஆசிரமத்தில் ஸ்ரீ ஞானசுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. மார்ச் 26ல் கணபதி ஹோமம் துவங்கி யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை மூன்றாம் கால யாக பூஜையை தொடர்ந்து கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுவாமிக்கு பால், தயிர் உள்ளிட்ட அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.