பதிவு செய்த நாள்
28
மார்
2022
02:03
தாண்டிக்குடி : தாண்டிக்குடி மங்களபுரம் ஸ்ரீ மங்கள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை, நவக்கிரகங்களுக்கும் விழா நடந்தது. விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், எந்திர ஸ்தாபனம், நவரத்தின ஸ்தாபனம்,திருமுறை விண்ணப்பம், நிறையவி அளித்தல், பேரொளி வழிபாடு, தொட்டு துலக்குதல், உயிர் ஊட்டுதல் என கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.