ராமேஸ்வரம் தீர்த்த நடைபாதை சேதம் : சமூக விரோதிகள் அட்டகாசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2022 01:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த நடைபாதை தடுப்பு கம்பிகள், தூண்களை சமூக விரோதிகள் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மாலை நேரத்தில் பொழுதுபோக்கிட 5 ஆண்டுக்கு முன் மத்திய சுற்றுலா நிதி ரூ.2 கோடியில் அக்னி தீர்த்த கடற்கரையில் 300 மீட்டர் தூரத்தில் டைல்ஸ் பதித்து, துருப்பிடிக்காத கம்பிகள் தடுப்பு வேலி அமைத்து, ராமாயண வரலாற்றை நினைவு கூறும் விதமாக தத்ரூபமான ஓவிய படங்களுடன் நடைபாதை அமைத்தனர். இந்த நடைபாதையை பக்தர்கள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் பயன்படுத்திய நிலையில் இரவு 10 மணிக்கு பின் சமூக விரோதிகள் மது அருந்தும் பார் ஆக மாற்றி ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் அங்குள்ள மின் விளக்குகள், தடுப்பு வேலி, தூண்கள், கருங்கல் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்துகின்றனர். இதனால் நடைபாதை அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே இரவில் அட்டகாசம் செய்யும் ஆசாமிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.