பதிவு செய்த நாள்
29
மார்
2022
03:03
கலபுரகி: அப்ஜல்புரா, தேவல கானபுபுராவின், தத்த மஹாராஜர் கோவில் உண்டியலில், 67.43 லட்சம் ரூபாய் ரொக்கம், 10 கிராம் தங்கம், 358 கிராம் வெள்ளிப்பொருட்கள் காணிக்கை செலுத்தப்பட்டன.கலபுரகி அப்ஜல்புராவின் தேவல கானபுராவில் உள்ள தத்த மஹாராஜர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற கோவிலில், கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. தற்போது அதிக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆண்டு தோறும் நான்கு முறை, கோவில் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். இதன்படி தாசில்தார் சஞ்சுகுமார் தாசரா முன்னிலையில், உண்டியல் நேற்று எண்ணப்பட்டது. 67.43 லட்சம் ரூபாய், 10 கிராம் தங்கம், 358 கிராம் வெள்ளிப்பொருட்களை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.இது மட்டுமின்றி, பக்தர் ஒருவர் உண்டியலில் கடிதம் ஒன்றை எழுதி போட்டுள்ளார். அதில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார், கன்னட மண்ணில் மீண்டும் பிறந்து வர, அருள் புரிய வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.