காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2022 11:03
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று ஆர்எஸ்எஸ் அகில இந்திய சகதர்ம ஜாகரனா பிரமுகர் அலே ஷியாம், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்ய வந்தவரை கோயிலின் தெற்கு கோபுரம் அருகில் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி அவர்களை சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்தார். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசி வழங்கியதோடு சுவாமி பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பிரசாரக் கவுதம், செயலாளர் மல்லிகார்ஜுன், திருமலா நாயுடு, வெங்கட ராமாநாயுடு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.