எமனேஸ்வரம்: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.
இக்கோயிலில் கடந்த 4 நாட்களாக தினமும் திருக்கல்யாண வைபவமும் நடந்து வருகிறது. இதன்படி நேற்று காலை 10:00 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மற்றும் வரதராஜ பெருமாள் கிளி மாலை அணிந்து அருள்பாலித்தனர். தொடர்ந்து கொடிமரம் முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தாயார் மண்டபத்தில் ஆண்டாள், பெருமாள் திருக்கல்யாணமும் தொடர்ந்து திருமண சடங்குகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு சுவாமி, தாயார் தனித்தனியாக நான்கு வாகனங்களில் வீதி வலம் வருகின்றனர்.