உலகில் மனிதராக பிறந்த அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கும். அந்த ஆசைக்காக தன் வாழ்நாட்களையே பலர் அடமானம் வைப்பர். சிலரோ கிடைத்ததுபோதும் என்று திருப்தி அடைந்துவிடுவர். இதில் எது சரி என்று கேட்டால்.. இங்கு ஒரு கேள்வி எழும். வாருங்கள் அதற்கான பதிலை தேடுவோம். முதல் ரக மனிதர்களை அந்த ஆசைதான் இழுத்துச் செல்கிறது. அவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ஆசை எந்தக் கட்டத்தில் நிற்கிறதோ, அங்கு பிரச்னையும் நின்றுவிடும். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியமா... இல்லை. சிலரால் மட்டும்தான் அதுமுடியும். அதுதான் இரண்டாம் ரக மனிதர்கள். இன்னும் ஒரு உண்மை என்னவென்றால், ஆசையை ஒழித்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இருக்காது. இங்கே ஆசையை முழுமையாக அகற்றுங்கள் என்று சொல்ல வரவில்லை. என்ன கிடைக்கிறதோ அதில் திருப்தி அடையுங்கள். எதிர்பார்ப்பை குறையுங்கள். எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என எங்கும் தேடாதீர்கள். அது உங்களுக்குள்தான் உள்ளது.