ரக்ஷை என்றாலே காப்பு என்றுதான் பொருள். ரக்ஷாபந்தனம் என்றால், காப்பு கட்டுதல் என்று அர்த்தம். ஒரு காரியத்தை நாம் தொடங்குவதற்கு முன்பு அந்தக் காரியம் முடியும் வரையிலும் இடையூறுகள் ஏதும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு செய்வதற்கு ரக்ஷாபந்தனம் என்று பெயர். நாம் செய்வது ஒரு நாள் பூஜையாகவும் இருக்கலாம் அல்லது பத்துநாள் பூஜையாகவும் இருக்கலாம். அதுமாதிரி செய்யக்கூடிய காரியங்களில் ரக்ஷாபந்தனம் செய்து கொண்டால், ஊர் எல்லையைத் தாண்டிப் போகக் கூடாது. உபவாசம் இருக்கணும், பிரமசரிய நியமத்துடன் இருக்கணும் என்று சாஸ்த்ரம் சொல்கிறது. அம்மாதிரி நியமத்துடன் இருந்து மேற்கொண்டால், அந்தக் காப்பு நம்மைக் காப்பாற்றும்.