காஞ்சிபுரம் சங்கரமடத்தில் அவிட்ட நட்சத்திர சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2025 11:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரமடத்தில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருநட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தையொட்டி, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருநட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அவிட்ட நட்சத்திர சிறப்பு பூஜை, காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நேற்று நடந்தது. இதில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேக அலங்காரமும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மஹாதீப ஆராதனையும் நடந்தது. இதில், காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தீபாராதனைகள் மற்றும் புஷ்பாஞ்சலி செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.இதில் சங்கர மடத்தின் ஸ்ரீ கார்யம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி. மேலாளர் சுந்தரேச அய்யர், முகாம் மேலாளர் ஜானகிராமன், நிர்வாகி கீர்த்திவாசன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.