கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை புனிதநீரை வைத்துப் பூஜிப்பதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2022 10:04
கும்பாபிஷேகம் என்ற சொல் புனிதநீரை அபிஷேகம் செய்வதை குறிக்கிறது. கருவறை தளவரிசை மற்றும் சுவர்களில் பழுது பார்க்கும்வேலை செய்யும் போதும், இறைத் திருமேனியை (விக்ரகம்) துõய்மை செய்து பீடத்தில் அஷ்ட பந்தன மருந்து சாத்தும் போதும் அன்றாடம் நடக்கவேண்டிய பூஜைகள் தடைபடுகின்றன. நமது வீட்டை முழுவதுமாகப் பழுது பார்க்கும் போது நாம் வேறு வீட்டில் குடியிருந்து கொள்வது போல, கருவறை திருப்பணி செய்யும்போது சுவாமியை யாகசாலையில் வைத்துப் பூஜிக்கவேண்டும். அதற்காக கடவுளை யாகசாலைக்கு அழைத்து வருவதற்கு ஒரு சாதனமாக இருப்பது கலசம். இதற்காக ஒரு குடத்தை கடவுளாகவே பாவித்து அலங்கரிக்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. குடம் தான் உடல். அதில் சுற்றப்படும் முப்பிரிநுõல் நாடிநரம்புகள். உள்ளே இருக்கும் நீர், நவரத்தினக்கற்கள், தங்கம், வெள்ளி ஆகியவை வீரிய சக்தி. மாவிலைக் கொத்து கழுத்து. தேங்காய் முகம். இவ்வாறு மனதில் எண்ணி அவற்றிற்குரிய மந்திரங்களைச் சொல்லி அலங்கரிக்க வேண்டும். இதற்குகும்பாலங்காரம் என்று பெயர். புனித நீர் என்பது இறைவன் திருமேனியின் உள் உறுப்புகள் மற்றும் ரத்தம் போன்றது. இதன் நடுவே தான் தெய்வசக்தி எனப்படும் உயிர்ச் சக்தியை மூலமந்திரம் சொல்லி ஆவாகனம் செய்து பூஜிக்க வேண்டும்.