பதிவு செய்த நாள்
02
ஏப்
2022
10:04
ப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் இந்துக்களின் இறைவழிபாட்டுக்காகவும் சனாதன தர்மத்தின் பயிற்சிக் களமாகவும் அமைவதற்கு ஏதுவாகவும் கோயில் ஒன்றை நிர்மாணிக்க அங்குள்ள பக்தர்கள் முடிவு செய்தனர். முதற்கட்டமாக 1989ல் பாலாலயம் அமைக்கப்பட்டு, திருப்பணி துவங்கியது. 1996ல் இந்தத் திருக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான இந்துக் கோயில்களில் அனைத்து தெய்வங்களும் இடம் பெற்றிருப்பார்கள். அந்த வகையில் இந்தக் கோயிலிலும், லட்சுமி சமேத மகாவிஷ்ணு, சீதா சமேத ராமர், லட்சுமணர், ராதா சமேத கிருஷ்ணர், உமையவள் சமேத சிவபெருமான், விநாயகர், வள்ளிதெய்வானை சமேத முருகப்பெருமான், நரசிம்மர், கருடர், வராஹர், ஹயக்ரீவர் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள். நுழைவாயிலுக்கு எதிர்புறத்தில் சாயிபாபா மற்றும் பஞ்சமுக அனுமன் ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன.