தேவகோட்டை: நகர சிவன் கோயிலுக்கு சொந்தமான பத்திர காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், பூஜைகள் நடந்தன. சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நேற்று முன் தினம் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று சப்தாவரணத்துடன் விழா நிறைவு பெற்றது.