வெள்ளகோவில் அருகே கண்ணபுரம் மாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2022 02:04
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே கண்ணபுரம் விக்ரம சோல இஸ்வர சுவாமி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா பொங்கல் பூச்சாட்டு விழா நடக்கிறது.
மார்ச் 30 ம் தேதி புதன்கிழமை பூச்சாட்டுதலுடன் துவங்கியது விழா நாளை புதன்கிழமை காலை கம்பம் போடுதல், ஏப்ரல் 11ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் தேர் முகூர்த்தம், இரவு எட்டு மணிக்கு மேல் அருள்மிகு பத்ரகாளி அம்மன் தேர் , கிராம சாந்தி, 15ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் வசந்த திருக்கல்யாண மகோற்சவம், 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல், மாலை நான்கு முப்பது மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் திருத்தேர் நிலை சேர்தல். நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து ஏழு நாட்கள் மண்டபக் கட்டளையும் ஏப்ரல் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தரிசனம் மஞ்சள் நீரை உற்சவ தீர்த்தவாரி நடக்கிறது. தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பச்சாபாளையம் கிராம ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். ஏப்ரல் 14-ம் தேதி வியாழக்கிழமை பொங்கல் விழா நடக்கிறது. 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை மர வரிசையுடன் விழா இனிதே நிறைவேறியது.