திருப்பட்டினம் ஜடாயுதபுரீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2022 03:04
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினத்தில் உள்ள ஜடாயுதபுரீஸ்வரர் கோவிலில் சூரியபூஜை நடைபெற்றது.
காரைக்கால் திருமலைராயன்பட்டினம் உள்ள மையாடுங்கண்ணி சமேத ஜடாயுதபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சூரிய பூஜை நடைபெறுவது வழக்கம் கடந்த ஆண்டு நோய் தொற்று காரணமாக சூரிய பூஜை நடைபெறவில்லை இந்தாண்டு இன்று காலை முதல் வரும் 9ம் தேதி வரை சூரிய பூஜை நடைபெற்றது.இதில் ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரியக்கதிர்கள் விழும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. அப்போது சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.இதில் கோவில் அறங்காவலர் வாரியத் தலைவர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.