கூடலூர்: கூடலூர், ஓவேலி பெரிய சூண்டி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருவிழா நேற்று துவங்கியது. காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு ஸ்ரீ கல்யாணமலை முருகன் கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள், முளைப்பாரி ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது.
மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள், யாகசாலை பிரவேசமும்; இரவு 7:30 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது. இரவு 9:30 மணிக்கு யந்திர பிரதிஷ்டை, சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை 5:00 மணிக்கு ஸ்ரீ விஸ்வ ஸக்ஸரநாம பாராயனம், இரண்டாம் யாகசாலை பூஜைகள், மூல மந்திராதி ஹோமங்கள், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. காலை 9 45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. இருந்தும் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மஹா அபிஷேகம், கோபூஜை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி, ஊர் மக்கள் செய்திருந்தனர்.