பதிவு செய்த நாள்
07
ஏப்
2022
08:04
சூலூர்: காமாட்சிபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்டது காமாட்சிபுரம். இங்குள்ள மாரியம்மன் கோவில், 60 ஆண்டுகள் பழமையானது. இங்கு, கோபுரம், மகா மண்டபம் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து, கடந்த, ஏப்., 4 ம்தேதி மாலை விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரண்டு மற்றும் மூன்றாம் கால ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை நான்காம் கால ஹோமம் முடிந்து, புனிதநீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 10:00 மணிக்கு மணிக்கு, ஸ்ரீ மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காமாட்சி புரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஸ்ரீ வில்லிப்புத்தூர் மனவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை மாரியம்மன் வழிபாட்டுக்குழு சமய, சமூக நல அறக்கட்டளையினர், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.