Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சிபுரம் மாரியம்மன் கோவில் ... சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் சூரிய பூஜை வழிபாடு சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் சூரிய பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அட்சய திரிதியைக்கு காலடியில் மகாலட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அட்சய திரிதியைக்கு காலடியில் மகாலட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 ஏப்
2022
02:04

காலடி: இந்து மத குலகுரு ஆதிசங்கரரின் அவதார தலமான காலடி கிருஷ்ணர் கோயிலில், அட்சய திரிதியையை ஒட்டி மே 3ம் தேதி கனகதாரா யாகம் நடக்கிறது. ஆதிசங்கரர், அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில், ஒரு ஏழைப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷாம் தேஹி என்று பிக்ஷை கேட்டார். அந்த பெண், தன் கணவர் ஏகாதசி விரதம் முடித்து உண்பதற்காக வைத்திருந்த உலர்ந்த நெல்லிக்கனியை தானமாக கொடுத்தார்.

அந்த ஏழையின் செயல் ஆதிசங்கரரின் உள்ளத்தை உருக்கியது. இது போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் செல்வம் இருந்தால், அது மற்றவர்களுக்கும் உதவும் என்ற அடிப்ப டையில், ஆதிசங்கரர் மகாலட்சுமியை துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். மகிழ்ந்த மகாலட்சுமி, அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தாள்.
 இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விதத்தில், எர்ணாகுளம் அருகிலுள்ள காலடி கிருஷ்ணன் கோயில் யாக மண்டபத்தில் வருகிற மே 1 முதல் 6 வரை கனகதாரா யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள், கனகதாரா யந்திரம் வைத்து, 32 நம்பூதிரிகள், 10008 முறை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி அர்ச்சனை செய்வர். மே 3 அட்சய திரிதியை அன்று காலை 9 மணிக்கு, மகாலட்சுமிக்கு தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகளால் அபிஷேகம் நடக்கும். அபிஷேக தங்க, வெள்ளி நெல்லிக்கனிகள் விற்பனை செய்யப்படும். இந்த நெல்லிக்கனிகளை பக்தர்கள் வாங்கி சென்றால், சிறந்த உடல் வளமும், செல்வவளமும் பெறுவார்கள்.
 தொடர்புக்கு: 093888 62321

கனகதாரா எந்திரம்: ரூ. 501
தங்க நெல்லிக்கனி: ரூ. 15,001
வெள்ளி நெல்லிக்கனி: ரூ. 2,001
பஞ்சலோக நெல்லிக்கனி: ரூ. 1.001
லெக்ஷ்மி நாராயண அபிஷேகம்: ரூ. 20,001
பிராமண தட்சிணை: ரூ. 1001
அன்னதானம்: ரூ. 8001
கனகதாரா அர்ச்சனை: ரூ. 101
நெல்லிக்கனி பாரா: ரூ. 51
நெல்லிக்கனி சமர்ப்பணம்: ரூ. 10

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar