ராமரின் பிரிவைத் தாங்க முடியாத சீதை உயிர் விட எண்ணி கயிற்றால் கழுத்தில் சுருக்கிட முயன்றாள். இதைக் கண்ட அனுமன் பதறிப் போனார். அன்னையை காப்பாற்றும் விதமாக ராமரின் வரலாறை இனிய பாடலாக பாடினார். ‘ஹனும தோடி’ என்னும் ராகத்தில் அமைந்த அப்பாடலைக் கேட்ட சீதையின் மனம் மாறியது. அங்கிருந்த ராட்சஷிகள் அப்பாடலின் இனிமையால் தங்களை மறந்து துாக்கத்தில் மூழ்கினர். இதைப் பயன்படுத்திக் கொண்ட அனுமன் தன்னை ‘ராமதுாதன்’ என சீதையிடம் தெரிவித்தார்.