பங்குனியில் நவமி திதியும், புனர்பூசம் நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது ஸ்ரீராமநவமி. இந்நாளில், பட்டாபிஷேக கோல ராமர் படத்தை பூஜையறையில் வைத்து, பொங்கல், பருப்பு வடை, நீர்மோர், பானகம், பாயசம், வெள்ளரிக்காய் படைத்து வழிபடுவர். ஸ்ரீராம ஜெயம் என 108 முறை ஜபிப்பர். பிரிந்த தம்பதி ஒன்று சேர இந்நாளில் சுந்தர காண்டம் படிப்பது நல்லது.