அனுமன் இலங்கையை எரித்த போது, அங்கிருந்த சில வீடுகளுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதில் விபீடணன் வீடும் ஒன்று. அதை அறிந்த ராவணன், விபீடணன் வீட்டை அடைந்தான். அவர் வீட்டு சுவர் முழுவதும் ராம, ராம, ராம என்று எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதை கண்ட ராவணன், கோபத்தில் விபீடணனைத் திட்டத் தொடங்கினார். உடனே விபீடணன், அண்ணா! நீ என்னைத் தவறாக எடை போட்டு விட்டாய். இலங்கை அரசனான உனது பெயர் ராவணேஸ்வரன்; தங்கள் தேவியான எனது அண்ணியின் பெயர் மண்டோத்ரி. உங்கள் இரண்டு பேரின் முதல் எழுத்துகளையும் இணைத்துத்தான் ராம என்று நான் சுவரில் எழுத ஆரம்பித்தேன். என்னைப் பின்பற்றி பலரும் எழுத ஆரம்பித்தனர்! என்று கூறி சமாளித்தாராம். விபீடணனின் சமயோசித புத்தியும், ராம நாமமும் அவரைக் காப்பாற்றி விட்டது.