இளையான்குடி: இளையான்குடி மதன வேணு கோபால பெருமாள் கோவிலில் ராமநவமி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட இளையான்குடி மதன வேணு கோபால பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி, சீதாராமர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த வருடம் ராமநவமி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.இதையடுத்து மதனகோபால சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டிருந்தன.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சீதா ராமர்திருக்கல்யாணம் வருகிற 13ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கும்,மறுநாள் 14ம் தேதி காலை 8 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை இளையான்குடி ராமநவமி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.