திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பாரதியார் நகர் முத்துமாரியம்மன் கோவில் 22 ஆம் ஆண்டு தீமிதி விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
திருவெறும்பூர் அருகேஉள்ள நவல்பட்டு பாரதியார் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக 22வது ஆண்ட இந்த ஆண்டு நவல்பட்டு பாரதிநகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 1ம் தேதி கணபதி, லட்சுமி, குபேர நவகிரக மூல மந்திரஜப ஹோமம், பரிவார தேவத ஹோமம், கோமாதா பூஜையும் நடைபெற்றது. இரவு போலீஸ்காலியில் உள்ள ஞான விநாயகர் ஆலயத்தில் இருந்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு பூச்சொரிதல் விழாவும் அன்று இரவு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலித்தார். ஒன்பதாம் தேதி அம்மன் வீதியுலாவும் 10 தேதியான இன்டு ஞான விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மன் கோவிலுக்கும் உள்ள தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இதில் ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 11ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், பெண்கள் முளைப்பாரி ஊர்வளம் மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.