பதிவு செய்த நாள்
11
ஏப்
2022
12:04
சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அம்மாபட்டியில் காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பாரி வேட்டை எனும் வினோத விழா நடந்தது.
இவ்விழா மார்ச்25 ல் சுவாமி சாட்டுதலுடன் துவங்கியது. தோரணம் கட்டுதல், மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி, பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல் என பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்வாக நேற்று பாரி வேட்டைஎனும் வினோத விழா நடந்தது. பண்டைய காலத்தில் காட்டுக்குள் புலி வேட்டைக்கு செல்வது போல் பாரம்பரிய உடைஅணிந்து, ஈட்டி, அருவாள், அம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் மேளதாளம், வாண வேடிக்கையுடன் இளைஞர்கள் சென்றனர். காளியம்மன், கருப்புசாமி, முருகன் வேடமிட்டும், ஆண்கள் பெண் வேடமிட்டும் நடனமாடிய படி கோயிலில் இருந்து சென்றனர். அங்கு புலி வேடமிட்டு இருந்த நபரைஅம்பு, ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களைஎய்து வேட்டையாடுவது போல் பாவனைசெய்து பாரிவேட்டைநிகழ்ச்சியைநடத்தினர். ஏராளமானோர் ரசித்தனர்