பதிவு செய்த நாள்
11
ஏப்
2022
11:04
பல்லடம்: செஞ்சேரிபுத்தூரில், பஜனை, மற்றும் நாட்டியத்துடன் ஸ்ரீராமநவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பல்லடம் அருகே, செஞ்சேரிபுத்தூரில் ஸ்ரீகாரண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, காரண வரதராஜ பெருமாள் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார். ராமநவமி தினமான நேற்று, ஸ்ரீராமநவமி விழா இங்கு கோலாகலமாக நடந்தது. முன்னதாக, கோவை வெள்ளலூர் கீதாபஜன் குழுவினரின் பஜனை, மற்றும் பிருந்தாவன நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மஞ்சள், மற்றும் ஊதா நிற உடை அணிந்து வந்த மகளிர் குழுவினர், ராம பஜனைக்கு ஏற்ப நாட்டியமாடி பக்தர்களை பரவசப்படுத்தினர். ராம காவியத்தின் சிறப்போடு, ஸ்ரீராமரின் மகிமைகளை உணர்த்தும் விதமாக பஜனை நடந்தது. சிறுவர், சிறுமியர், வயதானவர்கள் உட்பட கிராம மக்கள் பலரும் ராம பஜனையில் திரளாக பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காரண வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார்.