சிதம்பரம்: சிதம்பரம் கோதண்டராமன் கோவிலில் ஸ்ரீ ராம நவமி உற்சவத்தையொட்டி நேற்று தேர் திருவிழா நடந்தது. சிதம்பரம் மேல வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோவில் ஸ்ரீ ராம நவமி பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி திருமஞ்சனத்துடன் துவங்கியது. தினமும் ஒவ்வொரு வாகனத்திலும் காலையும், மாலையும் சுவாமி எழுந்தருளி பல்வேறு வாகனங்களில விதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சி தந்தார். நேற்று 10ம் தேதி முக்கிய நிகழ்வான தேர் திருவிழா , பகல் திருமஞ்சனம் நடந்தது மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் சீதா கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.