கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா : ஆயிரம் பேர்களுக்கு அமுக்ரா மாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2022 02:04
கம்பம்: கண்ணகி கோயில சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு ஆயிரம் பக்தர்களுக்கு அமுக்ரா மாத்திரைகள் வழங்க சித்த மருத்துவப் பிரிவு முடிவு செய்துள்ளது.
ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் தமிழக கேரள எல்லைப்பகுதியில உள்ள கற்புடை தெய்வம் கண்ணகி கோயில் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள். பளியன்குடிசை வனப்பகுதிகள் வழியாக நடந்தும், குமுளி வழியாக வாகனங்களிலும் பக்தர்கள செல்வார்கள். பளியன்குடி வழியாக செல்லும் பக்தர்கள் நடந்து செல்லும் போது ஏற்படும் களைப்பு தீர சித்த மருத்துவத் துறை சிறப்பு மருந்துவ முகாம் ஒன்றை நடத்துகிறது. காமயகவுண்டன்பட்டி சித்தா டாக்டர் சிராசுதீன் தலைமையில் இந்த முகாம் நடைபெறுகிறது. ஆயிரம் பேர்களுக்கு அமுக்ரா மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மாதுளை மணப்பாகு, காசினி சர்பத், நன்னாரி சர்பத், மலை நெல்லிச்சாறு வழங்கப்படுகிறது. கோயிலில் தரிசனம் முடிந்து திரும்பி வரும் பக்தர்களுக்கு வலி நிவாரண தைலங்கள், தொக்கண சிகிச்சை செய்யப்படுகிறது.