வடமதுரை: வேலாயுதம்பாளையத்தில் ஸ்ரீ பகவதியம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்தாண்டு நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று வருடாபிஷேக விழா நடந்தது. யாக சாலை பூஜைகளை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. ரெங்கநாதபுரம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் அர்ச்சகர் பிரசன்னவெங்கடேச ஐயர் தலைமையிலான குழுவினர் யாக சாலை பூஜைகளை நடத்தினர். நூறுக்கும் மேற்பட்ட கிராம பெண்கள் பொங்கல் வைத்தனர். கோயில் சார்பில் நடந்த அன்னதானத்தில் சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.