பதிவு செய்த நாள்
13
ஏப்
2022
04:04
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உண்டியல் எண்ணிக்கை நடந்தது. முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், பொது உண்டியலில், 73 லட்சத்து, 30 ஆயிரத்து, 646 ரூபாய் காணிக்கையாக இருந்தது. அதோடு, 80 கிராம், 780 மி.கிராம் தங்கமும், 2,385 கிராம் வெள்ளியும் இருந்தது. இத்தொகை, சோமையம்பாளையம், பாங்க் ஆப் இந்தியா கிளையில் டெபாசிட் செய்யப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.