வாடிப்பட்டி: மதுரை துவரிமானில் சாலைகரை முத்தையா சுவாமி, கருப்பணசாமி, நல்லதங்காள், பரிவார தெய்வங்களின் கோயில் உள்ளது. இக்கோயில் சுவாமிகளை குல தெய்வமாக வழிபடும் நாகமலை புதுக்கோட்டை குடிமக்களின் பங்குனி பொங்கல் விழா நடந்தது.கிராம கோவில் வீட்டிலிருந்து பெண்கள் பொங்கல் பானையை சுமந்து கால்வாய் கரை மற்றும் வயல் வழியாக துவரிமான் கோயிலுக்கு எடுத்து சென்றனர். இதில் இதில் கிராம மக்கள் வாணவேடிக்கை மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். பொங்கல் வைத்து, கிடாவெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.