கொட்டும் மழையில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2022 07:04
சின்னமனூர்: சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க துவங்கியவுடன் மழை கொட்டத் துவங்கியது.
சின்னமனூர் பூலாநந்தீசுவரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப். 7 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரங்களில் அம்மனும், சுவாமியும் வீதி உலா வருகின்றனர், ஏப். 14 ல் சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து நேற்று காலை 10:40 அளவில் அம்மனும் சுவாமியும் தேரில் எழுந்தருளினா. தொடர்ந்து பொதுமக்கள் காலை முதல் மாலை வரை தேருக்கு முன்பாக அம்மனுக்கும் சுவாமிக்கும் அபிஷேகம் செய்த வண்ணமிருந்தனர். மாலை சரியாக 5 மணிக்கு நகரின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் தேரோட்டம் துவங்கியது. தேரோட்டம் துவங்கியவுடன் மழையும் கொட்டத் துவங்கியது..வடக்கு ரத வீதியில் நிலையிலிருந்து தேர் புறப்பட்டு 20 நிமிடங்களில் செக்காமுக்தில் நிறுத்தப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு செக்காமுக்கில் இருந்து தேரோட்டம் துவங்கி, கண்ணாடிக் கடை முக்கில் நிறுத்தப்படும் . பின்னர் மாலை 5 மணிக்கு கண்ணாடிகடை முக்கிலிருந்து கிளம்பி தெற்கு ரதவீதி , மேற்கு ரத வீதி வழியாக தேர் நிலை நிறுத்தப்படும் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் நகராட்சி தலைவர் அய்யம்மாள், எம்.எல்.ஏ.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்.