செஞ்சி: புலிப்பட்டு காளியம்மன் கோவிலில் லட்சதீப விழா நடந்தது. செஞ்சியை அடுத்த புலிப்பட்டு கி காளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்ச தீப விழா நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையும், அகல் விளக்கேற்றி லட்சதீப விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.