திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஏப்.21 ல் நடைபெறுகிறது. தொடர்ந்து பத்து நாள் வசந்தப் பெருவிழா நடைபெறும்.
ஏப்.,21 அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூச்சொரிதல் துவங்கும். சப்த மாதர்களில் நடுவில் அலங்காரத்தில் மூலவர் அம்மன் அருள்பாலிப்பார். தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், பாரி, மதுக்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். பூத்தட்டுக்களுடன் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு செலுத்துவர். இரவு முழுவதும் அம்மனுக்கு பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வழிபடுவர். மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் நடந்து பூச்சொரிதல் நடக்கும். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். மாலை 6:30 மணி அளவில் காப்புக் கட்டப்பட்டு வசந்தப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். தினசரி இரவு அம்பாள் கோயில் குளத்தை வலம் வருவார். ஏப்., 30ல் ரத ஊர்வலம், மே 1ல் பொங்கல் விழா, தெப்பமும் நடைபெறும். ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழா குழுவினர் செய்கின்றனர்.