பதிவு செய்த நாள்
16
ஏப்
2022
07:04
செஞ்சி: நாட்டார்மங்கலம் அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலம் பூரணி, பொற்கலை உடனுரை அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு 14ம் தேதி காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமமும், 10 மணிக்கு சாமி சிலைகள் கரிக்கோல ஊர்வலமும் நடந்தது. மாலை 6 மணிக்கு கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜையும், வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், இரவு சாமி பிரதிஷ்டை மற்றும் கண் திறந்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7 மணிக்க கோபூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமமும், 10 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் தொடர்ந்து கடம் புறப்பாடும், 10.20க்கு அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து சப்த கன்னிகளுக்கு மாக அபிஷேகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை நட்டார்மங்கலம் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.