பதிவு செய்த நாள்
16
ஏப்
2022
07:04
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இன்று முதல் பக்தி சொற்பொழிவு துவங்குகிறது.
காரமடையில் உள்ள எஸ்.வி.டி. பசுமை அறக்கட்டளை சார்பில், அரங்கநாதர் கோவிலில், வாரம் ஒரு பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. இந்நிகழ்ச்சி, 2015ம் ஆண்டு துவங்கி, 2020ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக, 236 வாரங்கள் சொற்பொழிவு நடந்தது. கொரோனா பிரச்னையால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சொற்பொழிவு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதியின் பேரில், மீண்டும் இந்த அறக்கட்டளை சார்பில், சொற்பொழிவு நடைபெற உள்ளது. மாலை, 7:00 மணிக்கு, காரமடை அரங்கநாதர் கோவில் மண்டபத்தில் நிகழ்ச்சி துவங்குகிறது. இதில் திலகவதி, அவதார நோக்கம் என்ற தலைப்பில், சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகி சக்திவேல் கூறுகையில்," வாரம் ஒரு பக்தி சொற்பொழிவு நடத்தப்பட்டு வந்தது. பிரச்னையால் தடைபட்டது. தற்போது மீண்டும் சொற்பொழிவு துவங்கி உள்ளது. இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக பக்தி சொற்பொழிவு நடைபெறும். இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் மத்தியில், தமிழ் பற்றையும், ஆன்மீகத்தையும் வளர்க்கும் நோக்கத்தில், இந்த பக்தி சொற்பொழிவு நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்," என்றார்.