மகாவிஷ்ணுவை வழிபடுபவர்கள் விரதம் இருத்தல், பக்திக்கதை கேட்டல் அவசியம். வயிற்றுக்கு ஓய்வு அளிப்பதே விரதத்தின் நோக்கம். இதனால் உடலும், மனமும் புத்துணர்வு பெறும். பக்திக் கதைகளைக் கேட்பதால் மனம் துாய்மை பெறும். தாயின் வயிற்றில் பிரகலாதன் இருக்கும் போதே பக்திக்கதையைக் கேட்டதால் தான் பக்தனாக விளங்கினான். திருவோணம், ஏகாதசி நாட்களில் பக்திக் கதை கேட்பது, மகாவிஷ்ணுவின் திருநாமங்கள் பாடுவது, நாலாயிர திவ்ய பிரபந்தகளைப் பாடுவது புண்ணியம் அளிக்கும்.