குளிர்ந்த நீர். பறவைகளின் ஒலி. காற்று இதமாக வீசிய வேளை. நிலவு துாங்கும் நேரம் அது. படகை நீரின் போக்கில் செலுத்திக்கொண்டிருந்தார் ஒருவர். அவரது மனதிற்குள் படகை பற்றிய எந்தவொரு சிந்தனையும் செல்லவில்லை. ஆனால் படகு மட்டும் வேகமாக சென்று கொண்டிருந்தது. அதனால் துடுப்புக்கும் வேலை இல்லை. அவரது சிந்தனைக்கும் வேலை இல்லை. எந்தவொரு படமாக இருந்தாலும் கிளைமேக்ஸ் வந்தாக வேண்டுமல்லவா.. அதுவும் வந்தது. காற்று வேகமாக வீசியதால் படகும் விரைவாக ஓடியது. அவருக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. ‘பிரமாதம். என் பயணம் வேகமாகிவிட்டது’ என்று ஆராவாரம் செய்தார். துரத்தில் ‘ேஹா’ என ஓசை கேட்டது. அப்போதுதான் அவருக்கு புரிந்தது. படகானது நீர்வீழ்ச்சியை நெருங்கி கொண்டிருக்கிறது என்பது. அடுத்து என்ன.. படகு நீர்வீழ்ச்சிக்கு இரையானது. பலரும் இதுபோலவே வாழ்க்கை என்னும் ஓடத்தை திட்டமிடாமல் ஓட்டிச்செல்கிறார்கள். கடைசியில் நான் நினைத்த மாதிரி வாழ்க்கை அமையவில்லை என புலம்புவதுண்டு. எப்போதும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சுவையான பழம் வேண்டுமா.. இன்றே அதற்கான விதையை நடுங்கள்.