பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் கருப்பணசாமி பூஜை, பூசாரி அழைப்பு, புலி ஆட்டம், ஒயிலாட்டம் வாணவேடிக்கையுடன் அம்மன் கோயிலில் எழுந்தருளினார். மாவிளக்கு பூஜை, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2ம் நாள் 1008 குத்துவிளக்கு பூஜை நடந்தது. அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3ம் நாள் முளைப்பாரி, மேளதாளம் முழங்க பத்ரகாளியம்மன் பூஞ்சோலை சென்றார். ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின் முறை பரிபாலன சங்க நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.