ராமஅழகர் கோயில் சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கு ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2022 10:04
சின்னாளபட்டி: சின்னாளபட்டி ராமஅழகர் கோயில் சித்திரை திருவிழா நிறைவாக, சுவாமி கள்ளழகராக பூப்பல்லக்கில் ஊர்வலம் நடந்தது.
இத்திருவிழா, மார்ச் 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் லட்சுமி நாராயண பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக ஏப். 16ல், வெள்ளியங்கிரி சஞ்சீவி நதியில் எதிர்சேவை நடந்தது. ஏப். 20ல் தசாவதாரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று (ஏப். 21ல்), காமயசுவாமி கோயிலில் சுவாமி கோயிலில் இருந்து, கள்ளழகா் அலங்காரத்துடன் பூப்பல்லக்கில் பிருந்தாவன தோப்பிற்கு புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்கள், நாணயங்கள், மாதுளை, திராட்சை பழங்கள் ஆகியவற்றை சுவாமிக்கு, காணிக்கையாக சமர்ப்பித்தனர்.