ராஜபாளையம்: ராஜபாளையம் மலையடிப்பட்டி பூமாரி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை அடுத்து மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. நகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் பரிவார மூர்த்திகள் கன்னிமூல கணபதி, செல்வவிநாயகர், வீரபத்திரர், பைரவர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மண்டல பூஜைக்காக சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜைகள், கூட்டு வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை ஆதிநாராயண குமார் நாடார், சஞ்சீவி கனி நாடார், ரவி ராஜ் நாடார், காளிதாஸ் நாடார், முப்பழம் நாடார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.