திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2022 11:04
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவம், 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில், பல்வேறு வாகனங்களில் உற்சவர் புறப்பாடு நடந்தது.ஆறாம் நாள் விழாவான நேற்று காலை சூர்ணாபிஷேகம், ஆனந்த விமானப் புறப்பாடும்; இரவு, யானை வாகன புறப்பாடும் நடந்தது. விழாவின் பிரதான நாளான இன்று தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இன்று அதிகாலை 2:45 மணி முதல் 3:45 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.