பதிவு செய்த நாள்
22
ஏப்
2022
03:04
மாமல்லபுரம் : திருவிடந்தை, நித்தியகல்யாண பெருமாள் கோவிலில், கருடசேவை உற்சவம், நடந்தது.
மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், தொல்லியல், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் நித்திய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. திருமண தோஷ பரிகார கோவிலாக விளங்குகிறது. கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 15ம் தேதி, அங்குரார்ப்பணம், மறுநாள் கொடியேற்றம் என துவங்கியது. தொடர்ந்து, தினமும், காலை, இரவு உற்சவங்கள், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.நேற்று முன்தினம் மாலை, நித்திய கல்யாண பெருமாள், தேவியர், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேக திருமஞ்சன வழிபாடு நடைபெற்றது. இரவு, பெருமாள் ஊஞ்சல் சேவையாற்றினார். 11:30 மணிக்கு, கருட வாகனத்தில் வீதியுலா சென்றார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். இன்று காலை 10:30 மணிக்கு, சுவாமி திருத்தேரில் வீதியுலா செல்கிறார்.