குன்னூரில் முத்துப் பல்லக்கு ஊர்வலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2022 06:04
குன்னுார்: குன்னூரில், 77வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் விமரிசையாக நடந்தது. குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான முத்துப் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. விழாவில் குன்னூர் வி.பி. தெரு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம் முழங்க, பூக்காவடி, பால்காவடி, சிங்காரி மேளம், தேவி ரக்ஷா மற்றும் முத்துகாளைகளுடன் அபிஷேக பொருட்கள் ஊர்வலமாக தந்தி மாரியம்மன் கோவில் எடுத்துவரப்பட்டு தந்தி மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடந்தன.தொடர்ந்து மாலையில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கேரள சேவாசங்கத்தினர் செய்திருந்தனர்.