மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் உள்ள, மகா சக்தி மாரியம்மன் கோவிலில், 12ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. 19ம் தேதி இரவு அக்னி கம்பம் நடப்பட்டது. நேற்று மாலை,6:00 மணிக்கு நடந்த, 108 திருவிளக்கு பூஜையில், பெண் பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். 24ம் தேதி வெள்ளிக்குப்பம்பாளையம் வேணுகானம் பஜனை குழுவினரின், வள்ளிகும்மி கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 27ம் தேதி காலை சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்து வருதலும், மதியம் அம்மனுக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. மாலையில் மாவிளக்கு எடுத்தலும், 28ம் தேதி மஞ்சள் நீராடும், 29ம் தேதி மறுபூஜை நடை பெற உள்ளது.