மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2022 04:04
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் காட்டூர் காங்குலைன் குடியிருப்பு பகுதியில், முனியப்பன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடந்தது. இதை தொடர்ந்து, 48 நாட்களுக்கு, தினமும் அம்மனுக்கு மண்டல பூஜை செய்யப்பட்டது.மண்டல பூஜை நிறைவு விழாவை அடுத்து, நேற்று காலை வசந்தம் நகர் முனியப்பன் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால் மற்றும் தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.அப்போது மணிநகர் பள்ளிவாசல் அருகே வந்தபோது, பள்ளிவாசலில் நிர்வாகிகள்,அனைத்து பக்தர்களுக்கும், ஜூஸ் கொடுத்து வரவேற்றனர்.பின்பு அங்கிருந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, அம்மன் மீது பால் மற்றும் தீர்த்தம் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.