கொடைக்கானல்: கொடைக்கானல் டோபிகானல் பெரிய காளியம்மன் கோயில் விழா நடந்தது. விழாவில் 3 நாள் சப்பர பவனியும், அக்னி சட்டி எடுத்தல், சக்தி கரகம், மாவிளக்கு எடுத்தல் ஆகிய நடந்தன. இறுதியில் மஞ்சள் நீராட்டு நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.